சினிமா

'அக்யூஸ்ட்' படக்குழுவின் இசை விருந்து: 'சுடச்சுட பிரியாணி' பாடலின் டீசர் வெளியானது !

அதிரடி எதிர்பார்ப்புகளுக்கிடையே, ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘சுடசுட பிரியாணி’ பாடலின் டீசர் வெளியானது. இந்த பாடலை விஜய் பிரதாப் மற்றும் பிரேம்ஜி அமரன் பாடியிருக்க, ஹைடே கார்டி இதற்கான வரிகளை எழுதியுள்ளார்.

பிரபு சீனு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ படத்தில் உதயா, யோகி பாபு, அஜ்மல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நரேன் பாலகுமாரின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

இந்நிலையில், ‘சுடசுட பிரியாணி’ பாடலின் டீசர் வெளியானதை தொடர்ந்து, படம் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக ‘அக்யூஸ்ட்’ படக்குழு அனைவருக்கும் இரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பிரபு சீனு இயக்கத்தில், நரேன் பாலகுமாரின் இசையில், மருது ஒளிப்பதிவில், சில்வா ஸ்டண்ட் அமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை NP பன்னீர்செல்வம் தயாரித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் உதயா, யோகி பாபு, அஜ்மல், ஜான்விகா கலாகேரி, சேதுபதி, பவன், பிரபாகர், சுபத்ரா, ஸ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button