சினிமா

தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத காமெடி கதகளி.. 'பாஸ் (எ) பாஸ்கரன்' மறுபடியும் ரிலீஸ் ஆகிறது

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடித்து மிகப்பெரிய வெற்றியை குவித்த ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.

’கில்லி’ படத்தின் மாபெரும் வெற்றியால், பல்வேறு பழைய படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்பட்டியலில் இணைந்துள்ளது ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் இது. இதன் காமெடி காட்சிகள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 21-ம் தேதி ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. வாசன் விசுவல் மற்றும் தி ஷோ பீப்புள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்தன. இதனை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button