
ராமாயணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகிவரும், ராமாயணத்தில் சீதை வேடத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ராவணால் சிறைப் பிடிக்கப்பட்ட சீதா கதாபாத்திரத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பகுதியில் சாய் பல்லவி மிக நேர்த்தியான அழகிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் மிக நேர்த்தியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ராமாயணம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தயாராகி வருகிறது. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாவது பாகம் 2027 தீபாவளியிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாய் பல்லவி ஏற்கனவே தனது படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், ஆனால் சன்னி தியோல் இன்னும் படப்பிடிப்பைத் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.




