அரசியல்இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3985 கோடியில் 3 வது ராக்கெட் ஏவுதளம்…!

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

புதுடெல்லி மே 14 2025:

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3985 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரிய கனிம வளத்திட்டங்களை செயல்படுத்த ரூ.16,300 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கும்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடியில் செமிகண்டக்டர் ஆலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button