இந்தியாஉலகம்

வங்கதேசம் மீதான முதல் அடி…

வங்கதேசம் மீதான முதல் அடி விழுகிறது. உறுதியான, பலமான அடி.

வங்கதேசத்திற்கு வழங்கப்பட்டு வந்த transhipment வசதிகளை இந்தியா திரும்பப் பெற்றது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை அனுப்பும் போது இரண்டு இடங்களுக்கும் இடையில் உள்ள ஒரு இடத்தில் அந்த பொருட்களை இறக்கி விட்டு அங்கிருந்து அவற்றை அனுப்பும் வசதி தான் transhipment.

வங்கதேசம் தனது பொருட்களை இந்திய துறைமுகங்களில், குறிப்பாக ஹால்தியா துறைமுகத்தில் இறக்கி வைக்கும். அங்கிருந்து அவை நேபாளம், பர்மா உள்ளிட்ட மற்ற நாடுகளை சென்றடையும். இது இந்தியா வழங்கிய சலுகை. Goodwill measures எனப்படும் நல்லெண்ண நடவடிக்கை என்று கூட சொல்லலாம்.

அதே நேரத்தில் இந்திய ஏற்றுமதியாளர்கள் நீண்ட காலமாக சிரமங்களுக்கு ஆளானார்கள். ஒரு கப்பல் வந்து, ஒரு berthல் dock செய்து, அதன் பொருட்களை (கன்டெய்னர்) இறக்கி வைத்து, அந்தப் பொருட்கள் storage yardல் நகர்த்தி, அங்கிருந்து மீண்டும் அடுத்த இடத்திற்கு அனுப்பி என நீண்ட வரிசைகள் கொண்ட process அது.

இதில் இம்சை என்னவென்றால் அந்த கப்பல் நகரும் வரை நமது ஏற்றுமதியாளர்கள் காத்திருக்க வேண்டும். துறைமுகம் congestionல் சிக்குவது மட்டுமின்றி உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் operating expenses எகிறி மார்ஜின் அடி வாங்கும். நெடுநாட்களாக பலரும் புலம்பிக் கொண்டிருந்த விஷயம் இது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button