பிரதமருடன் தாவூதி போரா சமூகத்தினர் சந்திப்பு

புதுடெல்லி. ஏப் 18 2025
தாவூதி போரா சமூகத்தின் பிரதிநிதிக் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்

தங்களது நீண்டநாள் கோரிக்கையாக இருந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமருக்கு பிரதிநிதிகள் குழு நன்றி தெரிவித்தது

வக்ஃப்பின் கூற்றுக்கள் காரணமாக சமூகம் முன்னர் எதிர்கொண்ட சவால்களின் கதைகளை பிரதிநிதிகள் குழு பகிர்ந்து கொள்கிறது; பிரதமர் இந்தச் சட்டத்தை சிறுபான்மையினருக்காக மட்டுமல்ல, சிறுபான்மையினருக்குள் உள்ள சிறுபான்மையினருக்காகவும் கொண்டு வந்துள்ளார் என்கிறது
பிரதமரின் தலைமையின் கீழ் அனைவரையும் உள்ளடக்கும் மனப்பான்மையை உணர்ந்ததாக பாராட்டிய சமூக உறுப்பினர்கள், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் நம்பிக்கை வைத்துள்ளனர்

இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததன் பின்னணியில் உள்ள முக்கிய காரணிகளில் ஒன்று, நடைமுறையில் உள்ள அமைப்புமுறையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குறிப்பாக விதவைகள் என பிரதமர் குறிப்பிட்டார்.
தாவூதி போரா சமூகத்தினருடன் தமக்கு உள்ள தொடர்பைப் பற்றி விவாதித்த பிரதமர், வக்ஃப் சட்டத்தைக் கொண்டு வருவதில் சையத்னா முஃபாடல் சைஃபுதீனின் பங்களிப்பைப் பாராட்டினார்




