இந்தியா
அமெரிக்காவின் வரி கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை முழுமையாக சீர்குலைக்கும்” – ராகுல் காந்தி


கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா விஜயம் செய்தபோது, இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து பிற நடவடிக்கைகளும் நடந்துள்ளன.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை முழுமையாக சீர்குலைக்கும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி எச்சரித்துள்ளார். குறிப்பாக, வாகனத் தொழில், மருந்து உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகள் இந்த வரி நடவடிக்கைகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வரிக் கொடுமைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை, குறிப்பாக வாகனம், மருந்து மற்றும் விவசாயத் துறைகளை முற்றிலும் சீர்குலைக்கும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.




