இந்தியா

யுடியூப் வீடியோ பார்த்து உடல் எடை குறைக்க முயற்சி: இளம்பெண் மரணம்

கண்ணூர்: யூடியூப் வீடியோக்களை பார்த்து உடல் எடையை குறைக்கும் முயற்சில், கேரளாவை சேர்ந்த ஸ்ரீநந்தா என்ற இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநந்தா (வயது 18). இவரது உடல் எடை அண்மை காலங்களில் அதிகாித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் யூடியூப் வீடியோக்களை பார்வையிட்டுள்ளார். எப்படி உடல் எடையை குறைக்க வேண்டும். உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து தேடி எடுத்து வீடியோவை பார்த்து வந்துள்ளார். மேலும் அந்த வீடியோக்களில் கூறுவது போல் உணவு பழக்கத்தை மாற்றி உள்ளார்.

அப்படி செய்து வந்த நிலையில், ஸ்ரீநந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் எடை வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன குடும்பத்தினர், அவரை கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனா்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் சார்பில் கூறுகையில், ஸ்ரீநந்தா தொடர்ந்து உடல் எடையை குறைக்க குறைந்தளவு உணவு சாப்பிட்டு டயட் கன்ட்ரோல் செய்து வந்ததால் குடல் சுறுங்கியதாகவும், அதன் காரணமாக ஸ்ரீநந்தா உயிரிழந்ததாகவும் கூறினா். யூடியூப் பார்த்து டயட் மெயின்டெயின் செய்த இளம் பெண், உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button