4 ஐசிசி தொடர்களை வெல்வது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம்- கோலி நெகிழ்ச்சி

கடினமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, நாங்கள் இங்கு வந்து பெரிய தொடரை வென்றுள்ளோம். இது ஒரு அணியாக மீண்டும் எங்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது..என்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய பின்னர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது.. “நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பெற்று நீண்ட காலமாகிவிட்டது. இந்த வடிவம் சிறப்பானது. இதுதான் எங்கள் நோக்கம். கடினமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, நாங்கள் இங்கு வந்து பெரிய தொடரை வென்றுள்ளோம். இது ஒரு அணியாக மீண்டும் எங்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
தொடர் முழுவதும், வெவ்வேறு வீரர்கள் வெவ்வேறு போட்டிகளில் ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். கடந்த தொடர்களில் எங்களால் ஆட்டங்களை முடிக்கவோ அல்லது முக்கியமான சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத தருணங்கள் இருந்தன. ஆனால் இந்த முறை, அந்த அனுபவங்களில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம்.
கடைசி இரண்டு போட்டிகளையும் கே.எல்.ராகுல் முடித்த விதம் அந்த அனுபவத்திற்கு ஒரு சான்று. இதற்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து, வெற்றி கோட்டைத் தாண்ட முடியாதபோது, மற்றொரு வாய்ப்பைப் பெற்று அதைக் கடக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும். அதைத்தான் நாங்கள் இப்போது செய்தோம்.
எதிரணி எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பதை விட, தொடர் முழுவதும் எங்கள் திறமைகளில் மட்டுமே கவனம் செலுத்தினோம். 4 ஐசிசி தொடர்களை வெல்வது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம், இவ்வளவு காலம் விளையாடி இதைச் சாதித்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன்.” என்று விராட் கோலி கூறினார்.




