விளையாட்டு

128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்…

128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டுகள் உலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான சர்வதேச தொடர் ஆகும். இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்பர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். இந்த தொடரில் தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இடம்பெறும். உலக அமைதி, சகோதரத்துவம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்வதில் ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் முக்கியமானவை.

முதன்முதலில் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றன. 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்றது.

இந்நிலையில் 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் நடக்கவுள்ள நிலையில், 5 புதிய விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button