நூறு கோடி சம்பளம் கேட்ட அட்லீ.. தெறித்து ஓடிய தில்ராஜு !

ராஜா ராணி படத்தில் இயக்குநராக அறிமுகமான அட்லீ, குறுகிய காலத்திலேயே ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஹிந்தியில் ஜவான் திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூலித்தது. இதன் காரணமாக இந்திய அளவில் அவர் கவனம் பெற்ற இயக்குநராக மாறினார்.

ஜவான் வெற்றிக்கு பிறகு தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார் அட்லீ. அந்தப் படத்தை அவர் தயாரிக்க அவரது உதவி இயக்குநர் இயக்கினார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக இயக்குநர் அட்லீக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. இதற்கிடையே ஜவான் படத்தை இயக்கி முடித்த அவர் அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவிருப்பதாக பேசப்பட்டது.
அந்தப் படத்தை முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதற்காக அவர் 55 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும்; பட்ஜெட்டும் ஓவராக சொன்னதால் இந்த ப்ராஜெக்ட்டிலிருந்து அந்த நிறுவனம் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவிடம் சென்ற அட்லீ அவரிடம் நூறு கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும்; ஏற்கனவே கேம் சேஞ்சர் படத்தால் உச்சக்கட்ட நஷ்டத்தை சந்தித்த தில்லும் இதிலிருந்து வெளியேறிவிட்டார் என்று தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் அட்லீ இத்தனை கோடி ரூபாய் சம்பளம் கேட்பதற்கு என்ன காரணம் என்றும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. அதாவது பேபி ஜான் படம் அவருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்துவிட்டதாம். எனவே அந்த நஷ்டத்தை சரி செய்ய தனது சம்பளத்தை ஏற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை புரிந்துகொண்ட மற்ற தயாரிப்பாளர்கள் அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை நம்ம தலையில் கட்ட பார்க்கிறாரே என்று உஷாராகிவிட்டதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்




