Uncategorized
பவுனுக்கு ரூ.320 குறைந்த தங்கம் விலை !

சென்னை: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கு விற்பனை விற்பனையானது. இது நகை வாங்குபவர் மத்தியில் சிறிய ஆறுதலாக அமைந்தது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,270-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்தது ரூ.66,160-க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.72,168-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.112-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,12,000 ஆக இருந்தது.




