குதிரைக்காக காத்திருந்ததால் உயிர் தப்பிய 28 சுற்றுலாப் பயணிகள் – திக் திக் நிமிடங்கள்

கோலாப்பூர், சாங்லி, புனே மற்றும் ரத்னகிரியைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் குழு ஏப்ரல் 17 ஆம் தேதி பைசரன் பள்ளத்தாக்கில் விடுமுறைக்காக காஷ்மீரை அடைந்தது. அப்போது, 26 பேரைக் கொன்ற பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து அவர்கள் எப்படி நூலிழையில் உயிர் தப்பித்தார்கள் என்பதை அவர்கள் நினைவு கூர்கிறார்கள்.
காஷ்மீர் ஏப்ரல் 25, 2025
பைசரன் என்பது அடர்ந்த பைன் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட ஒரு பரந்த புல்வெளியாகும், மேலும் நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பார்வையாளர்களால் விரும்பப்படுகிறது. இந்தப் பகுதி ‘மினி-சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது.

ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் பஹல்காம் செல்ல குதிரை உரிமையாளர்களுடன் 20 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் 15 நிமிடங்கள் பேரம் பேசினர். ஏற்கனவே தங்கள் பயணத் திட்டத்தில் ஏற்பட்ட கோளாறுகளால் எரிச்சலடைந்திருந்த அவர்கள், குதிரைகள் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்ததால் பஹல்காமை அடைவதற்கான அவர்களின் திட்டங்கள் மேலும் தாமதமாகின. ஆனால் அந்த காத்திருப்பு மிகவும் மதிப்புக்குரியது என்பதை அவர்கள் அப்போது சிறிதும் அறியவில்லை.
கோலாப்பூர், சாங்லி, புனே மற்றும் ரத்னகிரியைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் குழு ஏப்ரல் 17 அன்று பைசரன் பள்ளத்தாக்கில் விடுமுறைக்காக காஷ்மீரை அடைந்தது. அப்போது, 26 பேரைக் கொன்ற பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து அவர்கள் எப்படி நூலிழையில் உயிர் தப்பினார்கள் என்பதை அவர்கள் நினைவு கூர்கிறார்கள்.

அந்த குழுவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான கோலாப்பூரைச் சேர்ந்த அனில் குரானே, குதிரை உரிமையாளர்களுடன் தாங்கள் பஹல்காம் செல்ல 15 நிமிடம் பேரம் பேசியதாகவும், குதிரைகளுக்காக தாங்கள் 15 நிமிடங்கள் வரை காத்திருந்ததாகவும் கூறினார். இதனால் தாங்கள் பஹல்காம் செல்வது தாமதமானதாகவும் இதனால் தாங்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

“அந்த தாமதம் மட்டும் இல்லையென்றால், பயங்கரவாதத் தாக்குதல் நடந்த இடத்தில் தாங்களும் இருந்திருப்போம். உயிரிழந்தவர்களின் பட்டியலில் எங்களது பெயர்களும் இருந்திருக்கும்,” என்றும் குரானே கூறினார்.
இருப்பினும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுற்றுலா குழு ஒன்று இறுதியில் குதிரைகளில் ஏறி பஹல்காமுக்கு புறப்பட தயாரானது. அப்போது உள்ளூர் ஓட்டுநர் ஒருவர் ஓடி வந்து, “பொறுங்கள்! அந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருக்கிறது அங்கு செல்ல வேண்டாம்” என்று கூறி அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் பாதுகாப்பாக திரும்பியதாக. குழுவைச் சேர்ந்த மற்றொரு சுற்றுலாப் பயணி ஷிவ்பிரகாஷ் சௌகுலே தெரிவித்தார்.

“செவ்வாய்க்கிழமை இரவு பஹல்காமில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு தாங்கள் முன்பதிவு செய்திருந்ததாகவும் ஆனால் அது ஒரு காட்டுப் பகுதியில் இருந்ததால், நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. அதற்கு பதிலாக ஸ்ரீநகருக்குச் செல்ல முடிவு செய்தோம்” என்றும் அவர் கூறினார்.
உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் சொந்த ஊர்களை சென்றடைந்தன
புதன்கிழமை, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களை சென்றடைந்தன.

உயிரிழந்தவர்களில் இந்தியா முழுவதிலுமிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளும், நேபாள நாட்டவரும் அடங்குவர். அவர்களின் உடல்கள் முதலில் ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டன, அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து, உடல்கள் விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும், விமான நிறுவனங்கள் ஸ்ரீநகரிலிருந்து 50 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி, பாதிக்கப்பட்டவர்கள் திரும்பி வருவதை உறுதி செய்தன. போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.




