சினிமா
Trending

சம்பவம் செய்ததா ‘ஓஜி சம்பவம்' ? - ‘குட் பேட் அக்லி’ முதல் சிங்கிள் ரிலீஸ் !

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஓஜி சம்பவம்’ வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ஆதிக்கே இந்தப் பாடலை இசையமைத்து, ஜி.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ளார். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். ‘திரை அரங்கம் செதறணும்… இவன் பேர் முழங்க கலக்கட்டும்…’ என்கிற வரிகள், அஜித் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

பாடல் வீடியோவில் அஜித்தின் பல்வேறு படங்களில் இடம்பெற்ற கெட்டப்கள் இடம்பெற்றுள்ளன. இடையிடையே அவரது வசனங்களும் இடம்பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன. ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளோடு ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

வெளியான ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பார்வைகளைத் தாண்டி யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது இந்தப் பாடல். மொத்தத்தில், அஜித் ரசிகர்களுக்கு ‘ஓஜி சம்பவம்’ ஒரு விருந்தாக அமைந்துள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்கு ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு ப்ரீமியர் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button