அதிக வருமானவரி கட்டிய சினிமா பிரபலம் யார் தெரியுமா ?

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது 82-வது வயதிலும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்த இவர், தற்போது சினிமா, விளம்பரங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சியான ‘கோன் பனேகா குரோர்பதி’ போன்றவற்றிலும் பணியாற்றி வருகிறார். 2024-25-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ள அவர், இந்திய அரசுக்கு ரூ.120 கோடியை வருமான வரியாக செலுத்தியுள்ளார். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய பிரபலமாக அமிதாப் பச்சன் உருவெடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நடிகர் ஷாருக்கான் ரூ.92 கோடி வருமான வரி செலுத்தி இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். ஆனால் நடப்பு ஆண்டில் அவரை பின்னுக்கு தள்ளி அமிதாப் பச்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். நடிகர் விஜய் ரூ.80 கோடியும், சல்மான் கான் ரூ.75 கோடியும் வருமான வரியாக செலுத்தியுள்ளனர்.




