
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலைகள் சம்பந்தமான தற்போதைய செய்திகளை இப்போது பார்ப்போம்.
புதுடெல்லி மே 10 2025 :

மத்திய அரசு தற்போது வரை ‘இந்தியா – பாகிஸ்தான் பதற்றம்’ என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தி வருகிறது.
நாம் சமூக ஊடகங்களில் எழுதும் போதும், ஹேஷ்டாக் போட்டாலும் இதையே பயன்படுத்தவும். ‘இந்தியா – பாகிஸ்தான் போர்’ என்று தற்போதைக்கு எழுத வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
****
இந்தியா – பாகிஸ்தான் பதற்றம்: இந்திய அரசு விளக்கம்:

பஞ்சாபில் உள்ள விமான தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது என்றும் இந்திய ராணுவத்தால் அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவில் இருந்து பாகிஸ்தான் தனது தாக்குதலை மேலும் அதிகரித்திருக்கிறது என இந்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் உத்தம்பூர் உள்ளிட்ட இடங்களில் பள்ளிக்கூடங்கள் மருத்துவ முகாம்கள் ஆகியவற்றை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி
இந்திய தரப்பிலிருந்து பாகிஸ்தானின் ராணுவ இடங்களை மட்டுமே குறிவைத்து தாக்கியதாக இந்திய அரசு அறிவிப்பு.
******
“பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா முறியடித்து பதிலடி கொடுத்துள்ளது.”

“எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது.
மேற்கு காஷ்மீர் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன”
“பாகிஸ்தான், தங்கள் தற்காப்புக்காக சர்வதேச வான்வழித்தடங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில், பாகிஸ்தானின் தவறான பொய் பிரசாரங்களை இந்தியா தவிடு பொடியாக்கியுள்ளது.
இந்தியாவின் விமான போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு பாகிஸ்தான் குறிவைத்துள்ளது” –
ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி பேட்டி
****
பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தாக்குதல் – உறுதிப்படுத்திய இந்திய அரசு

இன்று அதிகாலை போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் விமானப்படை தளமான நூர் கான், ரஹாமி யார் கான், ரஃபிகி, முரித், சியால்கோட் மற்றும் இரண்டு ரேடார் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
******
ஆயுதப்படைகளின் உயர் விழிப்பு நிலை – பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை!

ஆயுதப்படைகளின் உயர் விழிப்பு நிலை: இந்திய ஆயுதப்படைகள் தற்போது உயர் பாதுகாப்பு நிலையில் செயல்பட்டு வருகின்றன. எல்லை பகுதிகளில் ஏற்படும் ட்ரோன் உள்ளிட்ட அனைத்து விமான அச்சுறுத்தல்களையும் கண்காணித்து, எதிர்க்கும் தொழில்நுட்பங்கள் மூலம் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்:
எல்லை பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
தேவையற்ற வெளிநடப்புகளை தவிர்க்க வேண்டும்.
உள்ளூர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பீதி தேவை இல்லை எனினும், உச்ச அளவிலான விழிப்பும் முன்னெச்சரிக்கையும் அவசியம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
*****
பாக். தாக்குதல் – அரசு அதிகாரி பலி

காஷ்மீர்: ரஜோரியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில், மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தப்பா உயிரிழப்பு.
ஒரு பொறுப்புமிக்க அரசு அதிகாரியை இழந்துவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா இரங்கல்.
****
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை தகர்த்தது இந்திய படை!


சதி திட்டங்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தோற்கடிக்கும் என உறுதி
இந்திய ராணுவம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
அமிர்தசரஸ், மே 10 காலை 5 மணி: பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் டிரோன் தாக்குதல் மற்றும் பிற ஆயுதக் கணைகளால் மேற்குப் எல்லைகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இன்று அதிகாலை, பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள காசா கமாண்டு பகுதிக்கு மேலாக பாகிஸ்தானைச் சேர்ந்த பல ஆயுத டிரோன்கள் பறந்ததை இந்திய ராணுவம் கண்டறிந்தது.
விரைந்து செயல்பட்ட இந்திய வான்வழி பாதுகாப்புப் பிரிவு, அந்த அனைத்து எதிரி டிரோன்களையும் உடனடியாக தகர்த்தது.
இந்தியா மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானின் திட்டமிட்ட முயற்சியும், நம் நாட்டின் அதிபாதிப்பையும் பொதுமக்களின் உயிரையும் ஆபத்தில் இழுத்துவிடும் நடவடிக்கையும் முற்றிலுமாக ஏற்க முடியாதது என ராணுவம் கடுமையாக கண்டித்து உள்ளது.
“எதிரியின் சதி திட்டங்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தோற்கடிக்கும்” என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
*****
பாகிஸ்தானின் நூர் கான் தளத்தை தாக்கிய இந்திய படை!
*****
துருக்கி டிரோனை பயன்படுத்திய பாகிஸ்தான்!

பாகிஸ்தானால் இந்தியா எல்லைக்குள் அனுப்பப்பட்ட டிரோன்கள் ஆயுதமின்றி கேமராக்களுடன் வந்தன, பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டது
- கர்னல் சோபியா குரேஷி
பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாக்.,

இந்திய வான் எல்லைப்பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் வேண்டுமென்றே தங்கள் வான் எல்லையில் சிவில் விமானங்களை அனுமதித்துள்ளது. பயணிகள் விமானங்களை கேடயங்களாக பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.
விங் கமாண்டர் வியோமிகா சிங் குற்றச்சாட்டு
*****




