இந்தியா
திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: சந்திரபாபு நாயுடு அதிரடி

திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயிடு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். தற்போது பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் கோயிலில் பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகள் புண்படுத்தப்படாமல் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலைகளும் தேவஸ்தானத்திற்கு மட்டுமே சொந்தமானவை. வேறு யாரும் இதற்கு உரிமை கோர முடியாது. கோயில் மலைகளில் வணிக நோக்கத்துடன் செயல்பட யாருக்கும் அனுமதி இல்லை.
மேலும் மலை அடிவாரத்தில் தனியார் ஓட்டல்களுக்கு ஒதுக்கப்பட்ட 35.27 ஏக்கர் நிலம் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.




