
அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி மே 10 2025 :

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இந்த நடவடிக்கையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் PoK-யில் அமைந்துள்ள பஹவல்பூர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத மறைவிடங்கள் மீது இலக்குத் தாக்குதல்களை நடத்தியது.

“நேற்று முன்தினம் இரவு இந்தியாவின் 26 நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றது. பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது”
பாகிஸ்தான் தரப்பு 300 முதல் 400 ட்ரோன் விமானங்களை பயன்படுத்தி தாக்க முயற்சித்தது. இந்திய ராணுவத்தின் பதிலடியால் பாகிஸ்தான் ராணுவம் கடுமையான சேதங்களைச் சந்தித்தது.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் அந்நாட்டின் லாகூர் மற்றும் முக்கிய நகரங்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது.
இந்நிலையில்,அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

“இந்த இரவு நேரத்தில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அறிவும், பொதுவான நியாயத்தையும் கொண்டு இந்த முடிவை எடுத்ததற்கு வாழ்த்துகள்,” என டிரம்ப் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டு, டிரம்ப் இருநாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.




