Uncategorizedஅரசியல்இந்தியா

மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, “சிந்தூர்” தான் ஓடுகிறது – பிரதமர் ஆவேசம்…!

“மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் ஓடுகிறது”  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி மே 22 2025:

நாட்டில் 103 புதுப்பிக்கப்பட்ட ரெயில் நிலையங்களை காணொலி மூலம் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாரத மாதாவின் சேவகனான மோடி, நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்பதாக தெரிவித்தார்.

மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால், மோடியின் ரத்தம் கொதிக்கிறது.

மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது – ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் ‘ஆபரேஷன் சிந்தூரை’ குறிப்பிட்டு பிரதமர் மோடி பேச்சு.

பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது”

பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம்

மக்கள் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம்

3 படைகளும் சேர்ந்து ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கி பாக்.-ஐ மண்டியிட வைத்தனர்

இந்தியாவுக்கு சொந்தமான
தண்ணீரை பாகிஸ்தான் பெறாது

இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்

பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button