இலங்கையில் மலைப்பகுதியில் உருண்ட பேருந்து.. 21 பேர் உயிரிழந்த பரிதாபம்…!

இலங்கையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு, மே 11 2025:

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) பயணிகள் பேருந்து ஒன்று பாறையிலிருந்து சறுக்கி விழுந்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை இலங்கை போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்த விபத்து, மத்திய மாகாணத்தின் கோட்மலையில் பேருந்து ஓட்டுநர் மலைப்பாங்கான பகுதியில் இடதுபுறம் திரும்ப முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு யாத்திரைத் தலமான கதிர்காமத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு 75 பயணிகளை இந்தப் பேருந்து ஏற்றிச் சென்றது.
மேலும், அரசு போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து, பாறையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.




