ஆன்மீகம்

இந்த ராசிக்காரர்கள் உஷார் ! வீண் உறுதிமொழிகள் கொடுத்து வில்லங்கத்தில் மாட்ட நேரிடலாம் !

வேத சாஸ்திரங்களில் ஜோதிட சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட ராசிகளுக்கு இடம் பெயர்கின்றன. இவற்றின் இடப்பெயர்ச்சி ஒவ்வொரு ராசியினர் மீதும் சுப அசுப பலன்களை ஏற்படுத்துகின்றன. இதனால் சில ராசியினர் வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அந்த வகையில் உங்களின் 12 ராசிகளுக்கான இன்றைய பலன் மற்றும் அதிர்ஷ்டங்களை இந்த பதிவில் காணலாம்.

மேஷம்:
இன்று, பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மார்கெட்டிங் துறையினர் எதிர்பார்த்த ஆர்டர்களை எடுத்து முடிப்பர். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்:
எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கப்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்:
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்:
இன்று, மனதில் உற்சாகம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மேல்படிப்பு வாய்ப்புகள் கிடைக்கும். பணக்கஷ்டம் தீரும்; இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, வெளிர் நீலம்

சிம்மம்:
இன்று, தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை

கன்னி:
இன்று, பணி நிமித்தமாகப் பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்; கணவன்-மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்

துலாம்:
இன்று, உறவினர்களின் சச்சரவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வெளியூர் பயணங்களில் குறைவான பலனை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை

விருச்சிகம்:
இன்று, வீண் உறுதிமொழிகள் கொடுத்து வில்லங்கத்தில் மாட்டாதீர்கள். எடுத்த காரியத்தில் ஏதாவது தடைகளை சந்திக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்

தனுசு:
இன்று, வெற்றிமேல் வெற்றியைக் குவித்து சந்தோஷத்தில் திளைப்பீர்கள். புதிய சொத்து வாங்குவீர்கள்; திருமண காரியங்களில் ஏற்பட்ட தடைகளை நீக்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளஞ்சிவப்பு

மகரம்:
இன்று, அரசாங்க ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். கிளைத் தொழில்களுக்கு அடிப்படை அமைப்பீர்கள்; நண்பரின் உதவியால் மனை இடம் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: கருநீலம், இளஞ்சிவப்பு, வெள்ளை, சிவப்பு

கும்பம்:
இன்று, பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்; திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்படலாம்; உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்:
இன்று, மனைவி வழியாக நன்மைகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாள்வீர்கள்; சுப நிகழ்ச்சிகளுக்கான திட்டங்களை அமைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button