ஹோலி பண்டிகை இன்று தொடங்குகிறது- தலைவர்கள் வாழ்த்து !

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஹோலி பண்டிகை இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் (“வசந்தகாலத் திருவிழா”) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவனம், நந்தகோன், பர்சானா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தலங்களாக இருக்கும்.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கோலாகலமாய் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், “ஹோலிப் பண்டிகை நமது வாழ்வில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை வளர்க்கிறது. ஹோலியின் பல்வேறு வண்ணங்கள், வேற்றுமையில் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும் இப்பண்டிகை குறிக்கிறது. அன்பு, நேர்மறையான விஷயங்களை நாம் பரப்ப வேண்டும் என்பதையும் இப்பண்டிகை நமக்கு கற்பிக்கிறது. வண்ணமயமான இப்பண்டிகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டுவரட்டும்” என்று திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டம் நிறைந்த இந்த புனிதமான ஹோலி பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் ஆற்றலையும் அளிக்கட்டும்’’ என கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே.. இந்திய தலைநகரில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு- இருவர் கைது




