Uncategorizedதமிழகம்
ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட கூட்டணிதான்-விஜய்


“பாஜக, அதிமுக கூட்டணி ஆகப்பெரிய ஆச்சரியமில்லை” என்று விஜய் தெரிவித்துள்ளார்
திமுகவை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அதிமுகவைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சரியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிளவுவாத சக்திகளுக்குச் சாமரம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கெனவே 3 முறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தக் கூட்டே இப்போது ஏற்பட்டுள்ளது.
2026 தேர்தல் களம் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையே தான் என்றும் தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.




