அப்பப்பா என்ன வெயிலு…. முடியலடா சாமி…! கோடை வெப்பத்தை சமாளிக்க இதெல்லாம் எடுத்துக்கோங்க

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இதனை சமாளிப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளைக் குறித்து இங்கு பார்க்கலாம்
தர்ப்பூசணி மற்றும் முலாம்பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. தர்ப்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. இது உடலை குளிர்ச்சியாக வைத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது

வெள்ளரிக்காய் குளிர்ச்சியானது ஆகும். இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது

தயிர் மற்றும் மோர் இவைகள் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகின்றது. புளித்த பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுததுவதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது.

இளநீரில், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதுடன், இயற்கை சர்க்கரையும் நிறைந்துள்ளது

சப்ஜா விதைகள் உடல் வெப்பத்தை குறைப்பதுடன், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது

மேலும் இதுபோன்ற உணவுகளை உட்கொண்டு உடல் வெப்பத்தை சீராக வைத்துக்கொள்ளலாம்.




