சமையல்லைஃப் ஸ்டைல்

அண்ணாச்சி பழத்தில் அல்வா செய்வது ரொம்ப ஈஸி.. ட்ரை பண்ணுங்க !

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான பைனாப்பிள் அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ரவை -½ கப்
தண்ணீர் -1 கப்
அண்ணாச்சி பழம் -1
சர்க்கரை -1¼
உப்பு -1 சிட்டிகை
நெய் -8 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ரவை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பழுத்த அண்ணாச்சி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மை போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதை வடிகட்டி மூலமாக அரித்து ஒரு கப் அளவில் எடுத்துக் கொள்ளவும்.

ஏற்கனவே ஊற வைத்த ரவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மை போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதையும் ஒரு வடிகட்டியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த அண்ணாச்சி ஜூஸ்யை சேர்த்து கலந்து விடவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து வேக விடவும்.

இதை நன்கு கிளறி விடும் பொழுது கெட்டியாகும். பின்னர் இதனுடன் சர்க்கரை மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து விடவும். இவை கெட்டியாக மாறும் பொழுது சிறிது சிறிதாக நெய் சேர்த்து கலந்து விடவும். நெய் சேர்த்துக்கொண்டே இருக்கும் பொழுது பேன் மற்றும் கரண்டியில் ஒட்டாமல் வரும் வரை சேர்க்கவும்.

பின்னர் ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து பொன்னிறமாக மாறிய பின்னர் இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இப்போது சுவையான பைனாப்பிள் அல்வா தயார். இதை அனைவருக்கும் பரிமாறி மகிழவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button