வணிகம்

எகிறும் தங்கத்தின் விலை: பவுன் ரூ.71,500 ஐ தொட்டது

தங்கத்தின் விலை இன்று (ஏப்.17 2025) அதிரடியாக உயர்ந்து விற்பனையாகி வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.71 ஆயிரத்து 360 ஆக உள்ளது.

சென்னையில் இன்று (ஏப்.17 2025) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.8 ஆயிரத்து 920 உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.71 ஆயிரத்து 360 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.940 உயர்ந்து காணப்படுகிறது. நேற்று (ஏப்.16 2025) சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராம் ரூ.8815 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.70520 என காணப்பட்டது.

24 காரட் தூயத் தங்கம்

24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.9730 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.77840 ஆக விற்பனையாகி வருகிறது. இது நேற்று, கிராம் ரூ.9616 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.76928 என விற்பனையாகி வந்தது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் இன்று (வியாழக்கிழமை) கிராம் ரூ.110 என நிர்ணயிக்கப்பட்டு பார் வெற்றி கிலோ ரூ.1,10,000 ஆக உள்ளது. வெள்ளியை பொறுத்தமட்டில் கடந்த 2 நாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை.

எனினும், ஏப்.14ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.108 ஆக இருந்தது. அந்த வகையில் தற்போது கிலோ வெள்ளி ரூ.2 ஆயிரம் அதிகரித்துள்ளது. மேலும், ஏப்ரல் முதல் வாரத்தில் வெள்ளி விலை கிராம் ரூ.102 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.1,02,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button