அரசியல்இந்தியா

வாகா எல்லை மூடல் – சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு – மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி ஏப் 23 2025

வாகா எல்லை மூடல்..மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலின் எதிரொலியாக மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானியர்களுக்கு 48 மணி நேரம் கெடு

பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, பாகிஸ்தானியர்கள் இந்திய வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் – நாளை அனைத்துக்கட்சி கூட்டம்.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button