சினிமாதமிழகம்

கட்டத்துரையை மறந்துட்டீங்களே சிவக்குமார்…? உமா ரியாஸ் கான் பதிலடி..

சென்னை ஏப்ரல் 26 2025

நடிகர் சிவகுமார் கடந்த வாரத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது சூர்யாவின் சிக்ஸ் பேக் பற்றி பேசி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உமா ரியாஸ்கான் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.

சிக்ஸ் பேக் சர்ச்சை

கடந்த வாரத்தில்  தன்னுடைய மகன் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவக்குமார் பேசியது இன்னும் சோசியல் மீடியா பக்கங்களில் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ரெட்ரோ திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன்பு எவன்டா சிக்ஸ் பேக் வைத்தது? சூர்யாவை டாக்டர்கள் சிக்ஸ்பேக் வைக்க கூடாதுன்னு சொன்ன பிறகும் வைத்தான், சூர்யாவுக்கு பிறகும் எந்த நடிகரும் சிக்ஸ் பேக் வைக்கவில்லை என்று சிவக்குமார் பேசி இருந்தார்.

சிவகுமார் பற்றி ட்ரோல்

சிவகுமார் பேசி முடித்த அடுத்த செகண்ட் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அதற்குப் பிறகு இவர் பற்றி ட்ரோல் அதிகம் வரும் என்பது எதிர்பார்த்ததுதான். அதுபோல சூர்யாவுக்கு முன்பு எத்தனையோ நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்கள் என்று ஆதாரத்தையும் ரசிகர்கள் கமெண்ட்களில் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இது பற்றி விஷால் கூட தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார்.

விஷால் விளக்கம்

அதில் விஷால் பேசும் போது பொல்லாதவன் திரைப்படத்திற்காக தனுஷ் தான் முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தார். அதற்கு பிறகு சத்தியம் திரைப்படத்தில் நான் சிக்ஸ் பேக் வைத்தேன், அடுத்ததாக மதகஜராஜா திரைப்படத்தில் நான் சிக்ஸ் பேக் வைத்து நடித்திருந்தேன். அதற்கு பிறகு தான் மற்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்தார்கள் என்று பேசி இருக்கிறார்.

உமா ரியாஸ்கான் பதிவு

ஆனால் தனுசுக்கு முன்பே நடிகர் ரியாஸ்கான் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான வின்னர் திரைப்படத்தில் ரியாஸ்கான் சிக்ஸ் பேக் வைத்திருப்பார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் ரியாஸ்கானின் மனைவியான நடிகை உமா ரியாஸ் கான் சோஷியல் மீடியா பக்கங்களில் ரியாஸ்கானின் சிக்ஸ் பேக் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

வின்னர் கட்டத்துரை

அதைத் தொடர்ந்து வின்னர் திரைப்படத்தில் கட்டத்துரை ஆக நடிகர் ரியாஸ்கான் நடித்த காட்சியை ஒரு ரசிகர் பகிர்ந்து தமிழ் சினிமாவில் முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தது என் மகன் சூர்யா தான் என்று சிவக்குமார் சொன்னபோது கட்டதுரையின் ரியாக்சன் கேட்கல என்பது போல இருக்கிறது என்று ஒரு மீம்ஸ் இருக்கிறது அதை உமாரியாஸ்கான் தன் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

ரோல் மாடல்

இதற்கு ரசிகர்கள் இதுதான் செம ரிவெஞ் ஆதாரத்தோடு போட்டோ போட்டு இருக்கீங்களே? கட்டத்துரையை சிவகுமார் மறந்துட்டார், ஆனால் நாங்கள் மறக்கல. அவர்தான் பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைப்பதற்கு ரோல் மாடல் என்றெல்லாம் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button