அரசியல்இந்தியா

நல்லுறவை போற்றும்  “ஆப்பிரிக்க தினம் 2025 “…!

புதுடெல்லி மே 29 2025:

புதுடெல்லியில் உள்ள தாஜ் நட்சத்திர ஹோட்டலில் “ஆப்பிரிக்கா தினம் 2025” விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துக் கொண்டார்.

இந்தியா – ஆப்பிரிக்கா இடையேயான பாரம்பரிய நல்லுறவுகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

இந்தியாவில் உள்ள ருவாண்டா தூதரகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவரது வருகை அமைந்திருந்தது.

மாண்புமிகு ருவாண்டா தூதர் மேடம் ஜாக்குலின் மற்றும் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதிலும் இருந்து பல புகழ்பெற்ற தூதர்கள் மற்றும் உயர் ஆணையர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குறிப்பாக மொசாம்பிக், காம்பியா, லிபியா, எகிப்து, கோட் டி ஐவரி, சாட், கேமரூன், சோமாலியா, நமீபியா, கானா மற்றும் அங்கோலா நாடுகளில் இருந்து பல பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

ருவாண்டா நாட்டின் தமிழ்நாடு சிறப்பு தூதர் பேராசிரியர் டாக்டர் ராஜேந்திரன் ஆனைமுத்துவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வலுவான இருதரப்பு மற்றும் பலதரப்பு
நல்லுறவுகளை வளர்ப்பதில் இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக திகழ்ந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button