
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது
மதுரை மே 8 2025 :

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் மீனாட்சியம்மன் திருக்கோவிலில் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் தங்களின் மாங்கல்யத்தை மாற்றிக்கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை கண்டு ரசித்தனர்.
மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மொய் காணிக்கை செலுத்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கியூஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு:
மதுரையில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்றுமுதல் 12ம் தேதி வரை 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு




