Uncategorizedகல்விதமிழகம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு – வழக்கம் போல் பெண்களே முன்னிலை..!

சென்னை மே 8 2025 :

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று [மே 8] காலை 9 மணிக்கு வெளியிட்டுள்ளது; தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, https://results.digilocker.gov.in/ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

+2 தேர்வில் 95.03% மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 7,92,494 மாணவர்களில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தாண்டின் தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆக உள்ளது.

கலக்கிய மாணவிகள்!

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக (3.54%) தேர்ச்சி அடைந்துள்ளனர்!

மாணவிகள் – 4,05,472 (96.70%) | மாணவர்கள் – 3,47,670 (93.16%)

முக்கிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்:

ஆலோசனைக்கு: 📞 14417

+2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் 14417 என்ற தகவல் மைய எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித் துறை.

எந்தக் கல்லூரியில் படிக்கலாம், எவ்வாறு விண்ணப்பிக்கலாம், கல்விக் கட்டணம், உதவித்தொகை போன்ற தகவல்களை பெறலாம். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களும் துணைத்தேர்வு தொடர்பான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் பெறலாம் என தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button