அரசியல்இந்தியா

மன்னிப்பு கேட்ட பா.ஜ.க. அமைச்சர்…! (வீடியோ இணைப்பு)

ராணுவ கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதிகளின் சகோதரி’ எனக் குறிப்பிட்டுப் பேசிய ம.பி. பாஜக அமைச்சர் குன்வார் விஷய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தாமாக முன்வந்து ம.பி. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

போபால் மே 15 2025 :

“பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை |அழித்தவர்களுக்கு, அவர்களின் சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம்” என குன்வார் விஜய் ஷா பேசியிருந்தார்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து, மத்திய பிரதேசம் ஐகோர்ட்  உத்தரவின்  படி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தமது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார் :

எனது முழு பின்னணியும் இராணுவத்தைச் சேர்ந்ததுதான். எனது குடும்ப உறுப்பினர்கள் பலர் இராணுவத்தில் இருந்தனர்… கர்னல் சோபியா குரேஷி எனது உண்மையான சகோதரியை விட உயர்ந்தவர் அவர் தேசத்தின் நலனுக்காக தான்  எதிரிகளை பழிவாங்கினார். என் மனதில் எதுவும் இல்லை; உற்சாகத்தில் நான் சொன்னவை, யாரையாவது காயப்படுத்தினால், நான் இதயத்திலிருந்து மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஒரு முறை அல்ல, பத்து முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

மன்னிப்பு கேட்கும் அமைச்சர்

இதனிடையே, நான் ஒரு முஸ்லிம்,..பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு முஸ்லிம்,..தீவிரவாதி அல்ல…தீவிரவாதிகளுக்கு எந்த மதமும் கிடையாது…
இந்தியர்களைக் கொன்ற தீவிரவாதிகளை என் கையால் அழிக்கத் துடிக்கும் இந்திய முஸ்லிம் பெண் நான் என்று கர்னல் சோஃபியா குரேஷி உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

கர்னல் சோஃபியா குரேஷி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button