தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று “ஆரஞ்ச் அலர்ட் ” மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மே 26 2025:

திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் கொட்டித் தீர்த்த அதிகனமழை அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை பதிவு.
நீலகிரி அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 35 சென்டி மீட்டர் மழை பதிவு.
கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21.3 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
சிறுவாணி அணை அடிவாரம் – 12.8 செ.மீ., சின்கோனா – 12.4 செ.மீ., வால்பாறை – 11.4 செ.மீ., மழைப்பதிவு.

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.
கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.
பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, கோட்டயம், பாலக்காட்டிற்கு இன்று ரெட் அலர்ட்.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை.




