ரஜினி ஸ்டைலில் இமயமலை பாபா குகையில் அண்ணாமலை தியானம்

தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி அடிக்கடி இமயமலைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வது வழக்கம். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஜினிகாந்த் இமயமலை சென்றார். தற்போது ரஜினிகாந்த் ஸ்டைலில் அண்ணாமலையும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார்.

தமிழக பிஜேபியின் மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை,
எனக்கு இவ்வளவு நாட்களாக ஒரு பொறுப்பு என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இனி என்னால் அண்ணாமலையாக பேச முடியும். பொதுவாக ஒரு அரசியல்வாதிக்கு அடித்து ஆடும் ‘பாக்சிங்’ கலை தேவை. அதனால், என்னுடைய பேச்சு ‘ஸ்டைலை’ மாற்றிக்கொள்ள போகிறேன். இனி, பக்குவமாக பேச நயினார் நாகேந்திரன் இருக்கிறார் என கூறினார்.

இந்நிலையில் தீடீரென தில்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை அங்கிருந்து .இமயமலையில் உள்ள பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். கோயிலில் வழிபாடு செய்த பிறகு பாபா முத்திரையை காண்பித்தவாறு அண்ணாமலை எடுத்துக் கொண்ட புகைப்படம் என்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் பரபரப்புக்கு இடையே அண்ணாமலையின் இந்த திடீர் இமயமலை பயணம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
.




