சமையல்

அம்மா ஸ்கூலுக்கு டைம் ஆச்சி… 5 நிமிடத்தில் ரெடியாகும் வெங்காய சாதம்….

பசங்க ஸ்கூலுக்கு கிளம்புறதுக்குள்ள எதாச்சும் செய்யனுமேனு யோசிக்குறீங்களா… அப்பறம் திடீர்னு விருந்தாளிங்க வந்துட்டா என்ன செய்யலாம்னு நினச்சிட்டு இருக்கீங்களா… உங்களுக்காகத்தான் இருக்கவே இருக்கு ‘வெங்காய சாதம்’

வாங்க இந்த ரெசிப்பிய எப்படி செய்யனும்னு பாக்கலாம்… மீதமான உணவுல இத ஈசியா செஞ்சிடலாம்

தேவையான பொருட்கள்


சமைத்த சாதம் அல்லது மீதமான சாதம், வெங்காயம், ரசம் பொடி, உப்பு, புளி, வெல்லம், கறிவேப்பிலை, கடுகு, சீரகம், மஞ்சள், கொத்தமல்லி இலைகள்.

  • அரை கப் அரிசி
  • 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய்
  • அரை தேக்கரண்டி கடுகு
  • அரை டீஸ்பூன் சீரகம்
  • 7 – 8 கறிவேப்பிலை இலை
  • ஒரு பெரிய வெங்காயம்
  • கால் தேக்கரண்டி மஞ்சள் துாள் ஒரு டீஸ்பூன் ரசம் துாள்
  • 2 டீஸ்பூன் கொத்தமல்லி, சுவைக்கு ஏற்ப உப்பு

வழிமுறைகள்


அரிசியை சமைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். கஞ்சியாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். வெங்காயத்தை நன்றாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடாக்கவும். கடுகு மற்றும் சீரகத்துாள் சேர்க்கவும். கறிவேப்பிலையை சேர்க்கவும்

பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும். வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும். மஞ்சள், உப்பு, ரசம் துாள் சேர்த்து கலக்கவும். ஏற்கனவே பிழிந்து வைத்துள்ள புளிச்சாறை ஊற்றவும். நன்றாக வதக்கி, அடுப்பை குறைந்த பிளேமில் ஒரு நிமிடம் வைக்கவும்.

தயாராக உள்ள சாதத்தை, வாணலியில் போடவும். அதன் மீது ஏற்கனவே நறுக்கி வைக்கப்பட்டுள்ள சிறிது கொத்தமல்லிஇலைகளை தூவி இறக்கி வைத்து விடுங்கள். பின்னர் பரிமாறுங்கள்… ஜம்முனு இருக்கும்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button