
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பாராட்டி பிரதமர் மோடியின் கட் அவுட்க்கு கேரளாவில் பால் அபிஷேகம் செய்யப்பட்டது
கேரளா மே 8 2025

இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. ஜெய்ஸ்-இ-முகமது,லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன.மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன.

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் இந்த துணிச்சலான செயலுக்கு அனைத்து மாநிலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அப்பகுதி மக்கள் பிரதமர் மோடியின் செயலை பாராட்டி அவரது படத்திற்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். மேலும் அவர்கள் தமிழகத்தையும் சாடியுள்ளனர். அதாவது கூத்தாடிகளுக்கு (சினிமா நடிகர்களுக்கு) பால் அபிஷேகம்செய்யும் முட்டாள்கள் என்று குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

அதில், பிரதமர் மோடியின் படத்திற்கு அவர்கள் பால்அபிஷேகம் செய்கின்றனர்.




