தமிழகம்

உயிரை பணயம் வைத்து சிறுவனை காப்பாற்றிய இளைஞர் –  நேரில் அழைத்து எடப்பாடி பழனிச்சாமி பரிசு

சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்தார்.

சென்னை ஏப் 22 2025

சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி மழைநீர் தேங்கியிருந்தது. சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில், அதில் மின்சாரம் பாய்ந்தது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 9 வயதான சிறுவன் ஒருவன் அதில் சிக்கினான். உயிருக்கு போராடிய அந்த சிறுவனை கண்ணன் என்ற இளைஞர் உயிரை பணயம் வைத்து உடனடியாக செயல்பட்டு காப்பாற்றினார்.

அதாவது, மின்சாரம் பாய்ந்து உயிருக்கு துடிதுடித்த சிறுவனை கண்ணன் விரைந்து சென்று காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இளைஞர் கண்ணனுக்கு பல்வேறு தரப்பிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நிலையில், இளைஞர் கண்ணனுக்கு தங்க மோதிரம் பரிசளித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் கண்ணனுக்கு தமிழக அரசு பாராட்டி, சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் தமிழக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கண்ணனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கும்படி அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button