வணிகம்

தங்கம் விலை ₹2,200 வரை  குறைந்தது… உடனே பிளான் பண்ணுங்க.. !

சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 275 வரை குறைந்து விற்பனையாகிறது.

சென்னை ஏப் 22 2025

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடந்து அதிகரித்து காணப்படுகின்றது. சர்வதேச சந்தையின் நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் மத்திய வங்கியின் கொள்முதல் நடவடிக்கைகள் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இந்த தொடர் விலையேற்றம் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் விலையை கவனித்து, சரியான நேரத்தில் முதலீடு செய்யுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தங்கம் விலை

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் சவரன் ரூ.74,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 10,134-க்கும் சவரன் ரூ. 81,072 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 275 குறைந்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ. 2200 குறைந்துள்ளது. அந்தவகையில் கிராம் தங்கம் ரூ. 9015-ஆகவும், சவரன் ரூ. 72120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ. 9835-க்கும் சவரன் ரூ. 78680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை

வெள்ளி விலை பொருத்தவரை கடந்த சில தினங்களாக கிராம் வெள்ளி ₹111 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றும் மாற்றமின்றி கிராம் வெள்ளி ₹111 ஆகவும் 1 கிலோ கொண்ட பார் வெள்ளி ₹11,0000 ஆகவும் விற்பனையாகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button