Uncategorizedவணிகம்

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது…!

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு இன்று விற்பனையாகிறது; ஒரு கிராம் தங்கம் ரூ.8940க்கு இன்று விற்பனை ஆகிறது.

சென்னை மே 23 2025:

சென்னையில் இன்று (மே 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,940க்கு விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (மே 21) 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8930 ரூபாய்க்கும், சவரன் 71,440 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (மே 22) தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 8,975 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 71,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (மே 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,940க்கு விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூ.280 சரிந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button