தமிழகம்

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி…!

அரபிக்கடலில்புதிதாக  காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது.

சென்னை மே 22 2025:

கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

வடக்கு கர்நாடகா, கோவா கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.

கோவை – வால்பாறை, நீலகிரி – கூடலூர், கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 20 செ.மீ. வரைக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளது – தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button