Uncategorizedஅரசியல்தமிழகம்

தமிழகத்தில் இன்றைய முக்கிய செய்திகள்…

சென்னை ஏப்ரல் 25 2025

புதிய சம்மன்

₹1,000 கோடி மதுபான ஊழல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் (TASMAC) மூத்த அதிகாரிகளுக்கு அமலாக்க இயக்குநரகம் (ED), நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் (IAS) மற்றும் பொது மேலாளர்கள் எஸ். சங்கீதா மற்றும் டி. ராமதுரைமுருகன் உள்ளிட்டவர்களுக்கு புதிய சம்மன் அனுப்பியுள்ளது

*****”

குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வுக்கு இன்று(ஏப்.25) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

3,935 விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் – 4 தேர்வு.

குரூப் – 4 தேர்வுக்கு 10ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணபிக்கலாம்.

*****

மகளிர் உரிமைத்தொகை – ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் இதுவரை 1.14 கோடி பேருக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.

9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் நடைபெறவுள்ளது; அதில் விண்ணப்பிக்கலாம் – சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

******

“துணை வேந்தர்களை காவல்துறை மிரட்டியுள்ளது”

துணைவேந்தர் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களின் வீடுகளுக்கு சென்று காவல் துறை மிரட்டியுள்ளது.

மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என வீடு தேடிச் சென்று காவல்துறை மிரட்டியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

*****

டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.

சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.98 கோடி ஒதுக்கப்பட்டு மேட்டூர் அணையில் பணிகள் நடைபெறுகிறது.

பணிகளை திறம்பட செய்து முடிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேற்பார்வை அலுவலர்கள் நியமனம்.

சிறப்பு தூர்வாரும் பணிகள்
மே மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் – அமைச்சர் துரைமுருகன்.

****

“52 இல் 34 பேரு வந்திருக்காங்களாம்”

52 பல்கலைக்கழகங்களில் 34 பல்கலைக்கழக பிரதிநிதிகள் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பு  என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள், சில தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ள நிலையில் விளக்கம்; துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில் புறக்கணிப்பு;

சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார்

*****

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஏப்.25) மாலை 5 மணிக்கு தொடங்கி உள்ளது

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது. பாஜக உடன் கூட்டணி அமைத்த பிறகு முதல்முறையாக மாவட்ட செயலாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

*******

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button