
சென்னை ஏப்ரல் 19 2025
‘மக்களின் அவுட் ஆஃப் கண்ட்ரோல் ஸ்டாலின்’ என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில், இந்த விமர்சனத்தை அவர் முன் வைத்துள்ளார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், ” மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தபோது அவர்களுக்கு அடிபணிந்து தானே திமுக இருந்தது” என்றார்.
தொடர்ந்து, “ஊழலுக்கு ஒரு முறை தேச விரோதத்திற்கு ஒருமுறை என திமுக ஆட்சி இரு முறை கலைக்கப்பட்டது” என்றார்.
தமிழக மக்களின் அவுட் ஆப் கண்ட்ரோல்..

தொடர்ந்து மு க ஸ்டாலினை விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன், ” தமிழக மக்களின் அவுட் ஆஃப் கண்ட்ரோலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளார் என்றும் அதிமுக – பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைந்த பின்பு அவருக்கு பதற்றம் அதிகரித்து உள்ளது” என்றும் அவர் கூறினார்.
திருவள்ளூரில் மு.க. ஸ்டாலின் பேச்சு

முன்னதாக , திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின், ” அமித் ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதாக உத்தரவாதம் அளிப்பாரா? என்றார்.
மேலும், டெல்லிக்கு தமிழ்நாடு என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என கூறிய மு.க ஸ்டாலின், “தாம் அழுது புலம்புபவனும் அல்ல; யார் காலிலும் விழுபவனும் அல்ல என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.




