விஜய் சாதனையை முறியடித்த மோகன்லால்

மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கி வெளிவர இருக்கும் ‘எம்புரான்’ திரைப்படம் இந்திய அளவில் டிக்கெட் புக்கிங்கில் சாதனை புரிந்திருக்கிறது.
இந்தியா முழுக்கவே ‘எம்புரான்’ படத்தின் டிக்கெட் புக்கிங் மார்ச் 21-ம் தேதி தொடங்கப்பட்டது. ஒரே சமயத்தில் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கியதால், புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் குவிந்தனர். குறிப்பாக கேரளாவில் ஒரு மணி நேரத்தில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஃபுல் ஆனது.

மேலும், புக் மை ஷோ தளத்தில் ஒரு மணி நேரத்தில் 96.14K டிக்கெட்கள் விற்கப்பட்டு சாதனை படைத்தன. இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் புக் மை ஷோ தளத்தில் அதிக டிக்கெட் விற்பனையானது ‘எம்புரான்’ படத்துக்குதான். இதற்கு முன்பு ’லியோ’ படத்துக்கு 82K டிக்கெட்கள் விற்பனையானது சாதனையாக இருந்தது. தற்போது அதுவும் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்கள் விற்பனையால் முதல் நாளில் ‘எம்புரான்’ படம் அதிக வசூல் செய்யும் என கருதப்படுகிறது. கேரளாவில் டிக்கெட் முன்பதிவில் மட்டும் முதல் நாளில் ரூ.6 கோடி இதுவரை வசூலாகி இருக்கிறது. இந்த வசூலால் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைக்கும் என்கிறார்கள். ஏனென்றால் இதற்கு முன்பாக ‘லியோ’ படம் ரூ.12 கோடி வசூல் செய்ததே சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘எம்புரான்’. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் 2-ம் பாகமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.




