அரசியல்இந்தியா

கந்தஹார் விமானக் கடத்தல் பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் உயிரிழப்பு!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் கந்தஹார் விமான கடத்தல் பயங்கரவாதி அப்துல் ரவூப் அசாரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி மே 8 2025 :

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவர் அப்துல் ரவூப் அசார். ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, இந்தியாவால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளில் ஒருவர்.

அப்துல் ரவூப் அசார் மற்றும் அவரது சகோதரரான மசூத் அசாரும்தான் இந்திய ராணுவ தலைமையகத் தாக்குதல், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தாக்குதல், தில்லி நாடாளுமன்ற தாக்குதல், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு காரணமாய் அமைந்தவர்கள்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது, தேடப்பட்டு வந்த அப்துல் ரவூப் அசார் உயிரிழந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இவர், 1999-ல் நடத்தப்பட்ட கந்தஹார் விமானக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button