அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா? – இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி

2 ரெய்டுகளுக்கே அதிமுகவை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா? என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் “அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடிபோல் வந்து இறங்கியுள்ளது” என்று எக்ஸ் தளத்தில் பதிலுக்கு விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்று கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே இரண்டு ரெய்டுகளுக்கே அதிமுகவை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா? குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் – மொழியுரிமை – நீட் விலக்கு தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவை இடம்பெறுமா?




