நான் பத்து மொழிகளை கூட படிக்க சொல்லுவேன்: தமிழக அரசுக்கு எதிராக திரும்பிய சந்திரபாபு நாயுடு !

மும்மொழி கொள்கையை தமிழக அரசு தீவிரமாய் எதிர்த்து வரும் நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமிழக அரசுக்கு எதிராக பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேச்சில், “ஸ்டாலின் சார், நீங்கள் செய்யும் மொழி அரசியல் நிச்சயமாக நாங்கள் செய்ய மாட்டோம், மக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் வாக்கை அறுவடை செய்யும் கலையை செய்யாமல் மக்கள் கொடுத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான நிறைய தொலைநோக்கு மற்றும் நீண்ட கால திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு வளர்ச்சி அரசியலை கொடுங்கள்.

நான் என்னுடைய மாநில மக்களுக்கு மூன்று மொழி அல்ல பத்து மொழிகளை கூட படிக்கலாம் என்று தான் சொல்லுவேன் ஆனால் தாய்மொழியான தெலுங்கு மொழியை மறந்துவிடக்கூடாது என்றும் சொல்லுவேன் மற்றபடி பிழைப்புக்காக உழைப்புக்காக வேலைக்காக தொழிலுக்காக எத்தனை மொழியை வேண்டுமானாலும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் அதில் தவறு ஏதும் இல்லை என்று தான் சொல்லுவேன்.
இதையும் படிங்க.. கையெழுத்து வாங்காமல் நகர மாட்டேன்.. போலீசாரிடம் மல்லுக்கட்டிய தமிழிசை !
தமிழ்நாட்டில் சுமார் 5.5% தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள் இரு மொழி கொள்கையின் மூலம் அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தான் படிக்கிறார்கள், தங்கள் முன்னோர்களின் தாய்மொழியான தெலுங்க மறந்து போய்விட்டார்கள், மும்மொழி கொள்கை வரும் போது அவர்கள் தெலுங்கையும் ஒரு மொழியாக எடுத்து தங்களது தாய் மொழியை மறக்காமல் காலங்காலமாக வைத்துக் கொள்ள இந்த மும்மொழி கொள்கை உதவும்.
அதுபோல ஆந்திராவிலும் நிறைய தமிழை பூர்வீகமாக உள்ள தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இப்பொழுது தெலுங்கு மற்றும் ஆங்கிலம் படிக்கிறார்கள், அவர்களின் தாய்மொழியான தமிழை மறந்து விட்டார்கள், இதே மூன்று மொழிக் கொள்கை வந்தால் அவர்களும் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்து தமிழை மறக்காமல் தொடர வாய்ப்பு இருக்கிறது…” இவ்வாறு தெரிவித்தார்.




