அரசியல்இந்தியா

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முக்கிய செய்திகள்…

புதுடெல்லி ஏப்ரல் 25 2025

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் (84), பெங்களூருவில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பதவி வகித்த அவர், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்; பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார்.

******

கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்வித்துறையில் தலைசிறந்த ஆளுமையாகத் திகழ்ந்த டாக்டர் கி. கஸ்தூரிரங்கன் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இஸ்ரோவில் பணியாற்றிய அவர், விடாமுயற்சியுடன் இந்திய விண்வெளித் திட்டத்தை புதிய உச்சத்திற்கு  கொண்டு சென்றதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். “தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் டாக்டர் கஸ்தூரிரங்கன் மேற்கொண்ட முயற்சிகளுக்கும், நாட்டில் கற்றல் முறை முழுமையானதாகவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையிலும் இருப்பதை உறுதி செய்ததற்காக இந்தியா என்றென்றும் அவருக்கு நன்றியுடையதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பல இளம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு அவர் தலைசிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்” என்று பிரதமர் திரு மோடி மேலும் கூறினார்.

*****

டெல்லி மாநகராட்சி மேயராக பாஜகவின் ராஜா இக்பால் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

ராஜா இக்பால் சிங்குக்கு 133 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் மன்தீப்புக்கு 8 வாக்குகளும் கிடைத்தன. இதனடிப்படையில் மேயராக ராஜா இக்பால் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

*****

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை (ஏப்.24 2025) இரவு பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதி ஆசிப் ஷேக்கின் வீடு அழிக்கப்பட்டது என செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

******

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இந்தப் பிரமாணப் பத்திரத்தில், சட்டத்தின் எந்தவொரு விதிகளுக்கும் தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த பிரமாண பத்திரத்தில், சட்டத்தின் எந்தவொரு விதிகளுக்கும் தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு சட்டப்பூர்வ விதியை நிறுத்தி வைக்காது என்பது சட்டத்தில் ஒரு தீர்க்கமான நிலைப்பாடு என்றும் மத்திய அரசு கூறியுள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

*****

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.

மாநிலங்களில் உள்ள அனைத்து பாகிஸ்தான் நாட்டினரையும் அடையாளம் கண்டு வெளியேற்ற அறிவுறுத்தல்.

“அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தானியர்கள் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

******

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.

பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தது மருத்துவமனையில் உள்ளவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூற உள்ளார்

*****

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button