டயட் கன்ட்ரோலர்களுக்கு அட்டகாசமான ஒரு கிரேவி ! எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க !

பச்சை பயிறை வைத்து சப்பாத்தி மற்றும் பூரிக்கு ஒரு அட்டகாசமான கிரேவி செய்யலாம். இது சுவையானது என்பது வேறு விஷயம்.. ஆனால் அதைவிட மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எடையைக் குறைக்க விரும்புபவர்களின் முதல் விருப்பமாக இருப்பது சப்பாத்தி, முக்கிய விருப்பமாக இருப்பது பயிறு வகைகள். இந்த இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் செய்வது பல நன்மைகளை அளிக்கும். இந்த பதிவில் பச்சை பயிறை வைத்து எப்படி சப்பாத்திக்கு சைடிஷ் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்: –
பச்சை பயறு – 1/2 கப் – தக்காளி – 1 – இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் – மிளகாய் தூள் – 1 ஸ்பூன் – மல்லித் தூள் – 1 ஸ்பூன் – சீரகத்தூள் – 1 ஸ்பூன் – மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் – கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன் – உப்பு – தேவையான அளவு – கொத்தமல்லி இலை – சிறிதளவு அரைக்க: – தேங்காய் துருவல் – 1/4 கப் – முந்திரிப்பருப்பு – 5 தாளிக்க: – எண்ணெய் – 3 ஸ்பூன் – சீரகம் – 1 ஸ்பூன் – பெரிய வெங்காயம் – 1

செய்முறை: –
பச்சை பயறை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். 3 விசில் வந்த் பச்சை பயிறு வெந்ததும் அடுப்பை அணைக்கவும். – அதேசமயத்தில் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி தழையை நறுக்கி வைத்துக் கொள்ளவும். – தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். – அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். – வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். – தக்காளி குலையும் அளவிற்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும். – மசாலா பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி கலவையை சேர்த்து நன்கு கிளறவும். – பின்னர் வேக வைத்துள்ள பச்சை பயறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறுதியில் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான பச்சை பயறு கிரேவி ரெடி. – இந்த கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.




