லைஃப் ஸ்டைல்

காலிஃப்ளவரை வைத்து சும்மா கிர்ர்ர்ருனு ஒரு குருமா !

எவ்வளவு நாள்தான் வெறும் உருளைக்கிழங்கை வைத்தே சப்பாத்தி, பூரிக்கு குருமா வைப்பது. காலிஃப்ளவரை வைத்து ஒரு அட்டகாசமான குருமா செய்வது எப்படின்னு இந்த பதிவில் பாக்கலாம் வாங்க !

தேவையானப் பொருட்கள்: – காலிஃப்ளவர் – 1 – உருளைக்கிழங்கு 2 – உப்பு – தேவைக்கேற்ப

மசாலா அரைக்க: – சின்ன வெங்காயம் – 15 – இஞ்சி பூண்டு விழுது – 1 – மிளகாய் தூள் – 2 ஸ்பூன் – மல்லித் தூள் – 2 ஸ்பூன்

அரைக்க: – தக்காளி – 3 – முந்திரி – 10 – பால் – 25 மில்லி – தேங்காய் துருவல் – கால் கப்

தாளிக்க : – எண்ணெய் – தேவைக்கேற்ப – பட்டை – 2 – கிராம்பு – 4 – சோம்பு – கால் ஸ்பூன் – சீரகம் – கால் ஸ்பூன்

செய்முறை : -அரைக்க கொடுத்த சின்ன வெங்காயம் கலவையை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை தனியாக அரைத்துக் கொள்ளவும். முந்திரியில் தேங்காய் மற்றும் பால் சேர்த்து தனியாக அரைத்துக் கொள்ளவும்.

காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைவேக்காடு பதத்தில் வேக வைத்து எடுக்கவும். அதேபோல உருளைக்கிழங்கையும் வேக வைத்து எடுக்கவும். – வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். – பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த மசாலா கலவையை சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் உப்பு மற்றும் அரைத்த தக்காளி கலவை சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும். – பின்னர் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்க்கவும். மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். – அவை நன்கு வதங்கியதும் காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கிரேவி பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்த முந்திரி விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். – சூப்பரான காலிஃப்ளவர் கிரேவி தயார். இது சப்பாத்தி மற்றும் பூரியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button