சினிமாதமிழகம்

எம்.ஜி.ஆர். மாபெரும் தலைவனாக உருவான தினம்…!

எம் ஜி ஆர்-ரின் மாஸை வெளிச்சமிட்டுக் காட்டிய உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் ரிலீஸான தினம் இன்று.

சென்னை மே 11 2025:

அரசியல் பன்ச் டயலாக்குகள், சீன்கள் வருவதெல்லாம் இப்போ ரொம்ப சாதாரணமா போச்சு. ஜஸ்ட் ரெண்டு படங்கள் ஹிட் கொடுத்த நடிகர்கள்கூட, இப்போ தண்ணீர் பந்தல் வச்சுப்புட்டு தன் அடுத்த படத்தில் அரசியல் பன்ச் வைக்கச் சொல்லும் காலமிது. ஆனா, ஒரு படமே அரசியலாக மாறியது எனில் இந்த `உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில்தான். எம்.ஜி.ஆர் டைரக்ட் செஞ்சு, புரொயூஸ் செஞ்சு, ஆக்ட்டும் செஞ்ச இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு சந்தித்த தடைகளும் பிரச்னைகளும் கொஞ்ச நஞ்சமில்லை.

திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டு, அதிமுக என்கிற இயக்கத்தை எம்.ஜி.ஆர் தொடங்கியிருந்த சமயம் என்பதால், `உலகம் சுற்றும் வாலிபன்’ வெளியாவதற்குப் ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளை அப்போதைய திமுக அரசு போட்டுக்கிட்டே இருந்துச்சு. அம்புட்டையும் அடித்து நொறுக்கி, அறிவிச்சப்படி மே 11, 1973-ல் படத்தை ரிலீஸ் செஞ்சார் எம்.ஜி.ஆர். அவருக்கும் அதிமுக-வுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்தப் படம்,
கலர்ஃபுல் படம். ஹைடெக்காக ஓர் கதை. அங்கங்கே, ரகசியத்தைக் கண்டறிய நாடுநாடாகச் செல்லும் ஸ்கீரின் பிளே, ‘நீங்க ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க. ஆனா அவரோ அடுத்து யார் ஆட்சி யார் ஆட்சின்னு சொல்லிட்டிருக்காரு’ என்பதான வசனங்கள் படம் நெடுக உண்டு. அதிலும், கட்சி ஆரம்பித்த பிறகு, கருப்பு சிகப்புக்கு நடுவே அண்ணாவின் படத்தைக் கொடியாக்கிய பிறகு வந்த இந்தப் படத்தில், எம்ஜியார் பிக்சர்ஸ் கம்பெனியின் லோகோவில், அதிமுக கொடியும் அங்கம் வகிச்சுது.

கொஞ்சம் டீடெய்லா சொல்றதானா.. `உலகம் சுற்றும் வாலிபன்’ தயாரான சூழலே அக்னி நட்சத்திரத்தை விட நெருப்பான காலகட்டம்தான். திமுக-வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., கட்சியின் முன்னோடிகள் வருமானத்துக்கு மீறி சொத்துக் குவிச்சுப்விட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைச்சார். அத்துடன் கட்சியின் செயற்குழுவில் அமைச்சர்களின் சொத்து விவரங்களைக் கேட்கப்போவதாகவும் குண்டை வீசியெறிந்தார். எம்.ஜி.ஆரின் இந்த அதிரடி, கட்சிக்குள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்திச்சு. தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் அவசரமாகக் கூடிய கட்சியின் செயற்குழு, எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செஞ்சுது.

இதை அடுத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களும், திமுக-விலிருந்த எம்.ஜி.ஆர் விசுவாசிகளும் கொந்தளிச்சுப்புட்டாய்ங்க். கொந்தளிப்பு அடங்குவதற்கு முன்னதாக, அக்டோபர் 14-ம் தேதி கூட்டப்பட்ட கட்சியின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆரைக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுச்சு. கருணாநிதி இவ்வளவு ஆக்ரோஷமாகச் செயல்படுவார் என எம்.ஜி.ஆரே எதிர்பார்த்திருக்கலை.

கூடவே எம்.ஜி.ஆர் மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றும்படி ஒவ்வொரு தி.மு.க கிளைச் செயலாளருக்கும் வாய்மொழி உத்தரவு வந்துச்சு.அப்போது நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளையெல்லாம், கவிஞர் கண்ணதான், தான் எழுதியிருந்த ‘நான் பார்த்த அரசியல்’ என்கிற நூலில் விரிவாச் சொல்லி இருக்கார். “அரசியலில் ஒரு கட்சி தொடங்க வேண்டும். அதற்கு, தான் தலைவராக வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை. சினிமாவில் தன் ஆதிக்கம் போய்விடக் கூடாது, அரசியலில் தன் பிடி நழுவிவிடக் கூடாது என்றுதான் அவர் நினைத்தாரே தவிர, முழு நேர அரசியல்வாதியாகச் செயல்பட அவர் விரும்பவில்லை. ஆனால், அவரை வலுக்கட்டாயமாக ஒரு தலைவராக்கியது கருணாநிதிதான். கருணாநிதி போட்ட கணக்கு தப்பாகிப்போனது. மக்கள் பின்னணி எழுச்சி ஆகுமானால், அது ஒரு பெருங்கூட்டமாகத் திரளும். எம்.ஜி.ஆர் விஷயத்திலும் அதுதான் நடந்தது” என்றார் கண்ணதாசன். அவர் சொன்னது உண்மைதான். கருணாநிதி நீக்கியது எம்.ஜி.ஆர் என்கிற நடிகரை அல்ல… 1957, 1962, 1967, 1971 என நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்து, கட்சிப் பணியாற்றி, இரண்டு முறை எம்.எல்.ஏ-வான பழுத்த அரசியல்வாதியை நீக்கியதுதான் தப்பா புடுச்சு.

எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டிச்சு தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள் வெடிச்சுபுடுச்சு. பஸ்கள், லாரிகளை நிறுத்தி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் வாசகங்களை எழுதினாய்ங்க. காலேஜ்கள், பள்ளிகளில் போராட்டம் வெடித்து அவை செயல்பட முடியாத சூழல் நிலவிடுச்சு. படிப்படியாக தமிழகத்தில் இயல்புநிலை பாதிக்கப்பட்டு, ஒருகட்டத்தில் சட்டம் ஒழுங்கே ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுப் போச்சு. இதை கருணாநிதி கொஞ்ச ம் கூட எதிர்பார்க்கலை. எம்.ஜி.ஆரை நீக்கிட்டா, அதைக் கண்டிச்சு பத்து பேர் கத்துவாய்ங்க. பார்த்துக்கொள்ளலாம்" அப்படீன்னு கண்ணதாசனிடம் அவர் சொன்ன வார்த்தைகள் வலுவிழந்துபோயின. ராமாவரம் தோட்டத்துக்குச் சென்ற ரசிகர்கள்,நீங்க தனிக்கட்சி ஆரம்பிச்சே ஆகணும். இல்லைன்னா ஊர்ல தி.மு.க-காரங்க எங்களை இருக்க விட மாட்டாங்க” என்று எம்.ஜி.ஆரிடம் கொதிச்சாய்ங்க. அப்படி தன்னை நம்பியிருந்தவர்கள் வற்புறுத்துதால் தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்தார் எம்.ஜி.ஆர். அக்டோபர் 17-ம் தேதி அதிமுக என்கிற இயக்கம் உதயமாச்சு.

அந்த .காலகட்டத்தில்தான், அவர் நடித்த ‘இதயவீணை’ படம் ரிலீஸாச்சு. எந்தச் சிக்கலும் இல்லாமல், ‘காஷ்மீர்… பியூடிஃபுல் காஷ்மீர்’ என்று பாடிக்கொண்டே படம் சர்ச்சையில்லாமல் ஓடிச்சு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு எழுந்த ஆதரவும், கட்டுப்படுத்த முடியாமல்போன போராட்டங்களும் தி.மு.க-வின் கண்களை உறுத்திச்சு. அதை யடுத்தே ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு சிக்கல்கள் முளைத்தன. படத்துக்கு எம்.ஜி.ஆர் முதலில் வைத்திருந்த பெயர், மேலே ஆகாயம் கீழே பூமி' என்பதுதான். பிற்பாடுதான்உலகம் சுற்றும் வாலிபன்’ என்று பெயர் மாறியது. தான் இரு வேடங்களில் நடித்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து என்று பெரும்பகுதி வெளிநாட்டிலேயே முடித்தார் எம்.ஜி.ஆர். படத்தில் சந்திரகலா, லதா, மஞ்சுளா என மூன்று நடிகைகள் இருந்தும், நான்காவதாக தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத் என்றொரு நடிகையையும் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்

படத்தின் மியூசிக் டைரக்ட்ரா முதலில் புக் ஆனவர் குன்னக்குடி வைத்தியநாதன்தான். அப்பாலேதான் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளரானார். வெளிநாட்டுப் படபிடிப்புக்குக்கூட அதிகம் பேர் அனுமதிக்கப் படலை. எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, ஆர்.எம்.வீரப்பன், மஞ்சுளா, லதா, சந்திரகலா, நாகேஷ், அசோகன், கேமராமேன் ராமமூர்த்தி, டைரக்டர் பா.நீலகண்டன், வசனகர்த்தா சொர்ணம், நடன இயக்குநர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே வெளிநாடு ஷூட்டிங்குக்குச் சென்றாய்ங்க. தாய்லாந்தில் படத்தை ஷூட் செய்வதற்கு வெறும் பத்து நாள்களே அந்த நாட்டு அரசால் அனுமதியளிக்கப்பட்டிருந்துச்சு. அங்கே ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருபோது, அந்த இடத்துக்கு அருகில் விபத்து ஒன்றில் தாய்லாந்து நடிகர் ஒருவர் சிக்கிக் கொண்ட தகவல் எம்.ஜி.ஆருக்குக் கிடைச்சுது. உடனடியா சம்பவ இடத்துக்குச் சென்ற எம்.ஜி.ஆர்., மீட்புப் பணிகளில் தானே களமிறங்கி நிலைமையைச் சமாளித்திருக்கிறார். இந்தத் தகவல் அடுத்தநாள் வெளிவந்த தாய்லாந்து பத்திரிக்கைகளில் செய்தியானவுடன், எம்.ஜி.ஆர் மீது ஏற்பட்ட நன்மதிப்பால் படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை இரட்டிப்பாக்கியது தாய்லாந்து அரசு..

ஜப்பானின் எக்ஸ்போ 70 அரங்கில், எட்டு லட்சம் மக்களுக்கு நடுவே, ‘உலகம்… அழகுக் கலைகளின் சுரங்கம்’ என்ற பாடலின் படப்பிடிப்பை நடத்தியதெல்லாம் அவருடைய அசாத்திய திறமை, சாதனை. படம் ரிலீஸுக்குத் தயாராகிருந்த வேளையில்தான் தி.மு.க தரப்பிலிருந்து சிக்கல்கள் முளைத்தன. மதுரை மேயராக இருந்த மதுரை முத்து என்பவர், `உலகம் சுற்றும் வாலிபன்’ ரிலீஸானால் புடவைக் கட்டிக்கொள்கிறேன்’’ என்று பகிரங்கமாகவே சவால்விட்டார் (கட்டிங் கண்ணையா)

அடிசினலா அப்போ திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு 1973, மே 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுச்சு. அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அதை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் எம்.ஜி.ஆர். அதே சமயம் அவரின் பிம்பத்தை உடைப்பதற்காக மொத்த அமைச்சரவையையும் இடைத்தேர்தல் களப்பணியில் இறக்கிவிட்டு, ‘வெற்றியடைந்தே ஆக வேண்டும்’ என்று தி.மு.க-வுக்குக் கட்டளையிட்டார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. தமிழக அரசியலே கொந்தளிப்பான நிலைக்குச் சென்ற தருணத்தில், உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியாவது திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் மானப் பிரச்னையாகிப் போச்சு... வத்தலகுண்டு-வில் எலெக்ஷன் பிரசாரத்துக்கு போன இடத்தி, அவரது வாகனத்தை மறித்த தொண்டர்கள்,தலைவரே, உலகம் சுற்றும் வாலிபன்’ படம் எப்போ ரிலீஸாகும்? தேதியைச் சொல்லுங்க...' -னு கேட்டாய்ங்க.படம் விரைவில் ரிலீஸாகும். ரிலீஸ் தேதியை இப்பவே சொல்லிட்டா, எல்லாரும் படம் பார்க்குற நினைப்பிலேயே இருப்பீங்க… தேர்தல் வேலையை யார் பார்க்குறது?’ அப்படீன்னு சிரித்தபடி அவிய்ங்களுக்கு பதிலளிச்சார் எம்.ஜி.ஆர். ஆனாலும் கூடியிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவரை விடலை. திமுக-காரங்க கேலி பண்றாய்ங்க. எங்களுக்கு இது கெளரவப் பிரச்னை தலீவரே. நீங்க தேதியை சொல்லித்தான் ஆகணும்' என்று விடாப்பிடியாக இருந்தாய்ங்கர். கொஞ்ச நேரம் கூட்டத்தை அமைதியாகப் பார்த்த எம்.ஜி.ஆர்.,மே 11-ம் தேதி `உலகம் சுற்றும் வாலிபன்’ ரிலீஸாகும்’ ன்னர். மொத்தக் கூட்டமும் எழுப்பிய கரவொலியில் வத்தலகுண்டு நகரே குலுங்கிடுச்சு. இடைத்தேர்தலுக்கு ஒன்பது நாள்கள் முன்பாக படத்தை ரிலீஸ் செய்வதாக எம்.ஜி.ஆர் அறிவித்ததால், திமுக வட்டாரத்தில் பரபரப்பு பத்திக்கிச்சு.

ஆனா உலகம் சுற்றும் வாலிபனு’க்கு தியேட்டர் கிடைப்பதில் ஏகப்பட சிக்கல்கள் முளைத்தன. தியேட்டர் அதிபர்களை நேரடியாகத் தொடர்புகொண்ட எம்.ஜி.ஆர்., தியேட்டர் சொத்துக்கு எந்தச் சேதாரம் ஏற்பட்டாலும், அதற்கு தான் பொறுப்பேற்பதாக உறுதியளிச்சார். அப்போ சென்னை மாநகரில் போஸ்டருக்கான வரி திடீரென உயர்த்தப்பட்டுச்சு. இதில் உஷாரான எம்.ஜி.ஆர்., சிங்கப்பூரிலிருந்து ஸ்டிக்கர் விளம்பரங்களை வரவழைச்சு நகரெங்கும் ஒட்டவைச்சார். படப்பெட்டிகளைக் கொண்டு சேர்ப்பதற்கேஜேம்ஸ் பாண்ட்’ வேலைகளை அவர் பார்க்க வேண்டியிருந்துச்சு. ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒன்பது போலி ரீல் பெட்டிகளும், ஒரு ஒரிஜினல் படப்பெட்டியும் அனுப்பப்பட்டன. படப்பட்டி கொள்ளை போகாமலிருக்க இப்படியோர் ஏற்பாட்டை எம்.ஜி.ஆர் செஞ்ச்சாராக்கும்.

ரிலீஸாகும் மே 11-ம் தேதியும் வந்துச்சு. தமிழகமெங்கும் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுச்சு. ஜெனரேட்டர் உதவியுடன்தான் பல இடங்களில் தியேட்டர்கள் இயங்கிச்சு. போலீஸ் அதிகாரிகளுக்கு, `என்ன நடந்தாலும் தியேட்டர் பக்கம் போகக் கூடாது’ -னு வாய்மொழி உத்தரவு போடப்பட்டதால், காவல்துறை பாதுகாப்பு ஏதும் தியேட்டருக்கு அளிக்கப்படலை. இதை தெரிஞ்ச்சு தியேட்டர்களை திமுக-வினர் தாக்கிவிடாமல் இருக்க, அதிமுக-வினர்தான் பாதுகாப்பை அளிச்சாய்ங்க.

இந்தக் கட்டுப்பாடுகளையெல்லாம் மீறித்தான் உலகம் சுற்றும் வாலிபனு’க்கு கூட்டம் கூடியது. படத்தின் ஓப்பனிங் காட்சியில் அ.தி.மு.க கொடி காட்டப்பட்டதும், தியேட்டரில் எழுந்த கரவொலிக்கு அளவே இல்லை. டைட்டில் கார்டில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில்,நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’ என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியதுமே தியேட்டரில் விசில் பறந்துச்சு.பாடலில் வரும், `நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்… இருந்திடும் என்னும் கதை மாறும்’ என்கிற வரிகள் தொண்டர்களை முறுக்கேற்றிச்சு.

நினைச்சுப்பாருங்க… ஆளுங்கட்சியான தி.மு.க-வை எதிர்த்து, பல்வேறு அடக்குமுறைகளைச் சந்திக்கும் தொண்டர்கள், இந்த வார்த்தைகளை திரையில் கேட்கும்போது அவிய்ங்க மனநிலை எப்படி இருந்திருக்கும்? ஆவேசக் குரல்களும், கைதட்டல்களும், விசில்களும் பஞ்சமில்லாமல் ஒலிச்சுது. இத்தனைக்கும் இந்தப் படத்தில் அரசியல் பன்ச் வசனங்கள் பெரிதாக ஏதும் இருக்காது. ஆனால், படத்தின் வெற்றியைத் தன் வெற்றியாக ஒவ்வொரு தொண்டனும் பார்த்ததால், பட ஒவ்வொரு காட்சியும் ஹவுஸ்ஃபுல்லா ஹன்ட்ரட் டேசை தாண்டி ஓடிச்சு..

மொத்தத்துலே எம்.ஜி.ஆருக்குள் இருந்த ஒரு தலைவனை, ஒரு போராளியை உசுப்பேத்தி வெளியே கொண்டுவந்த படம்தான் `உலகம் சுற்றும் வாலிபன்.’ இதை வெறும் படமாக மட்டும் கடந்து போயிட முடியாது.

டைட்டில் பாடல்

நன்றி: ஆந்தையார் சினிமா நியூஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button